Saturday, August 20, 2011

தேடினேன் உன்னை!!!


உன்னை காண நேர்ந்தது
             சில சந்தர்ப்பங்களில்
எனை உன் வசம்
           இழுத்தாய் அத்தருணங்களில்
                    - தேடினேன் உன்னை

அந்த வாய்ப்பு
           பிறகு ஏற்படவில்லை
இருந்தும் நீ என்
         மனத்தை விட்டு நீங்கவில்லை
                      - தேடினேன் உன்னை


உன்னை எனக்கு
           முழுதும் தெரியாது
இருந்தும் என்னுள்ளம்
             உன்னை பிரியாது
                     - தேடினேன் உன்னை

யாவரையும் கவரும்
            உனது இளமை
மனத்தில் நிறையுமே
          அதன் இனிமை
உணர்விற்கு இதமளிக்கும்
           உன் மென்மை
                   - தேடினேன் உன்னை


உன்னை மறுபடி காண
          நினைத்தது மனம்
உன்னை தேடி
       அலைகிறேன் முதல் அக்கணம்

                    - தேடினேன் உன்னை

உன்னால்
        கவியாய் ஆனவாரோ பலர்
உன் மேல்
       பைத்தியமானவரும் உளர்
                   - தேடுகிறேன் உன்னை


வளர்ந்த இடத்தில்
                நீ இல்லை
பிறந்த இடத்தில்
              உன் சுவடு இல்லை
கிடைப்பாய் என்றே
         தோன்றவில்லை
இருந்தும் உன்னை
      விட மனமில்லை

              -  தேடுகிறேன் உன்னை

அகப்பட
     மாட்டாயோ ஒரு தினம்
உன்னை நாடி
     துடிக்குது என் மனம்

தேடினேன் உன்னை
தேடுகிறேன் உன்னை
நீயோ என்
     கண்ணில் படவில்லை
இப்போதும் என்
     மனம் தளர்வதில்லை

தேடுவேன் உன்னை
என் செந்தமிழே!!!
 
-நா.சரவணன்









Sunday, July 17, 2011

தமிழ் கற்ற ஜப்பானியர்......

தமிழ் கற்று அழகாக ஒரு ஜப்பானியர் பேசுகிறார்.
இதற்கு பெருமை கொள்வதா???
இல்லை நம்மில் பலர்
தமிழ் பேச தயகுவதை
கண்டு வருந்துவதா???

Saturday, July 16, 2011

முதல் முயற்சி

வாழ்வு எங்கே.....


காற்றிலே மிதந்தோம்


கடல்

ஆழத்தையும் அளந்தோம்....

கண்டம் விட்டு

கண்டம் செல்ல

சில மணி

துளியில் பறந்தோம்...

மைல்கள் நமக்கு

தூரம் இல்லை

விண்கற்களும்

பாரம் இல்லை...

அறிவியலில்

நாம் விரிந்துவிட்டோம்

அதில் நாம்

வாழ்க்கையை தான் சுருக்கிக்கொண்டோம்...

தினம் பணம்

தேடி அழைகின்றோம்

அதில் ஒப்பில்லா

காலத்தை தொலைகின்றோம்...

ஈன்றவரை காண

மனம் இல்லை

குழந்தையை பேண

பொழுது இல்லை...

நாலு சுவற்றுக்குள்

நாம் உலகம்

வாடும் பிற உயிர் பற்றி

நமக்கில்லை கலக்கம்

அண்டை வீட்டார் துன்பம் கூட

காற்றில் அலையும்

செய்தி ஆகும்..


இவ்வாழ்வை நாம் தொடர்ந்தால்,

மன அழுத்தம்

தேடி வரும்..

மனித நேயம்

மறைந்தே போகும்,

சுயநலமே

கொள்கை ஆகும்..


இன்ப வாழ்வை தருவது,

பையில் நிறையும்

பணம் அல்ல

நல்லெண்ணம் நிறைந்த

நம் மனம்...

பிறர்க்கு உதவி,

இனிதே கழிப்போம்

நம் நேரத்தை

அதில் மறப்போம்

நம் மன பாரத்தை...


நம் முடிவு,

மருந்து நெடி வீசும்

தனிமை அறையிலா?

நம் உற்றார் சூழ்ந்த

நம் சொந்த உறைவிலா???...

வாழ்வை மனிதராய் வாழ்வோம்..

பிறர் நலத்தை

நம் நலமாய் காப்போம்…



-நா.சரவணன்

தொடக்கம்...

                         தெய்வாத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
                         மெய்வருத்த கூலி தரும்